Sports
இந்த மைதானத்தில் டெய்ல் என்டர் கூட 70 ரன் அடிப்பார்- பாக். வாரியத்தை கழுவி ஊற்றிய ஷாஹித் அப்ரிடி !
17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர்.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். 13.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய இந்த ஜோடி தொடர்ந்து அதிரடியாக ஆடியது.
கிராவ்லி 122 ரன்களிலும், டக்கட் 107 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த போப்பும் அதிரடியை தொடர்ந்த நிலையில், இடையில் ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அதனைத் தொடர்ந்து போப்புடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்த ஹாரி புரூக் 80 பந்துகளில் சதமடித்து 154 ரன்களுக்கும், போப் 90 பந்துகளில் சதமடித்த நிலையில், 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் குவித்தது. அதிலும் ஒரே நாளில் ஒரே நாளில் 500 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிக ரன் குவித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அப்துல்லா, இமாம் உல் ஹாக், பாபர் அசாம் உள்ளிட்டோர் சதம் அடித்தனர். பின்னர் இரண்டாம் இன்னிங்க்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 35.5 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து அதிரடியாக டிக்ளர் செய்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் முழுக்க முழுக்க பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தார் ரோடு போல இருக்கும் இந்த ஆடுகளத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ஷாஹித் அப்ரிடியும் இந்த மைதானத்தை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஒரு கட்டத்தில் ஆட்டம் சலிப்பை ஏற்படுத்தியது, பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் எதுவும் இல்லை. WTC இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால், அதற்கு பெரிய அணிகளை வீழ்த்த வேண்டும். பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட வேண்டும், எங்கள் பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் அவுட் ஆகிவிடுவார்களோ என்ற பயத்தில் எங்களால் வாழ முடியாது. பந்து எலும்பும் பிட்ச்களில் பேட்ஸ்மேன்களை விளையாட வைக்க வேண்டும். ஆனால் இத்தகைய ஆடுகளங்களில் எங்களின் நசீம் ஷா கூட 70-80 ரன்கள் எடுக்க முடியும்" என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !