Sports
இப்போது சிரிப்பதா இல்லை அழுவதா? நடப்பு சாம்பியனை வீழ்த்தியும் துனிசியாவுக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன.
முன்னர் நடைபெற்ற உலககோப்பைகளில் ஏதும் ஒரு அணி அல்லது இரண்டு அணிகள் திடீர் எழுச்சி பெற்று முன்னணி அணிகளை பதம் பார்க்கும். ஆனால், இந்த முறை பெரும்பாலான அணிகள் அவ்வாறு திடீர் எழுச்சி பெற்று ஒவ்வொரு போட்டியையும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ளது.
தொடரின் முதல் அதிர்ச்சியாக நட்சத்திர வீரர்களை கொண்ட அர்ஜென்டினா அணி சற்றும் எதிர்பாராத விதமாக சவூதி அரேபியாவுடன் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. அதற்கு அடுத்த நாளே முன்னாள் உலகசாம்பியன் ஜெர்மனி அணி ஜப்பான் அணியுடனான போட்டியில் 1-2 என்று வீழ்ந்தது.
அதன் பின்னர் முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த ஈரான் அணி வேல்ஸ் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில், உலகின் நம்பர் 2 அணியாக இருக்கும் பெல்ஜியத்தை மொராக்கோ அணி 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடப்பு உலகசாம்பியன் பிரான்ஸ் அணி துனிசியா அணியை எதிர்கொண்டது. கடந்த சில கால்பந்து உலககோப்பைகளில் நடப்பு சாம்பியன்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவந்த நிலையில், இந்த முறை அசத்திய பிரான்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று வரலாறை மாற்றி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில், இத்தகைய பலம்வாய்ந்த பிரான்ஸ் அணி துனிசியாவை ஊதி தள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் அணியை சரிக்கு சமமாக துனிசியா எதிர்த்துநின்றது. பிரான்ஸ் அணி தந்து முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து இரண்டாம் நிலை வீரர்களோடு களம் இறங்கிய நிலையில், அந்த அணியின் முன்கள வீரர்களால் துனிசியா தடுப்பரணை தடுக்க முடியவில்லை.
அதேநேரம் கிடைத்த வாய்ப்பில் 7-வது நிமிடத்தில் துனிசியா கோல் அடிக்க அதற்கு ஆப் சைட் வழங்கப்பட்டது. முதல் பாதி கோல் அடிக்காமல் சமனில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாதியில் துனிசிய வீரர்கள் ஆக்ரோஷமாக செய்யப்பட்டனர். இதற்கு பலன் 57-வது நிமிடத்தில் கிடைத்தது.
துனிசியா வீரர் கஸ்ரி பிரான்ஸ் வீரர்களை தாண்டி கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறவைத்தார். அதன்பின்னர் பிரான்ஸ் அணி தனது முன்னணி வீரர்களை களத்துக்கு கொண்டுவந்த நிலையிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
அதிலும் கடைசி 20 நிமிடங்களில் பிரான்ஸ் அணி வீரர்கள் முழுக்க முழுக்க துனிசியா கோல் வளையத்தைதான் சுற்றி சுற்றி கோல் அடிக்க முயன்றனர். அவர்களின் முயற்சிக்கு ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், பிரான்ஸ் வீரர் கிறிஸ்மான் அபாரமாக கோல் அடித்த நிலையில், ஆட்டம் சமனுக்கு வந்தது. ஆனால் VAR-ல் அது ஆப் சைடு என தீர்ப்பளிக்கப்பட துனிசிய வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
ஆனால், துனிசிய ரசிகர்கள்தான் இந்த வெற்றியை கொண்டாட முடியாமல் சிரமப்பட்டனர். காரணம் உலகசாம்பியனை அந்த அணி வென்றாலும் இந்த தொடரில் இருந்து அந்த அணி வெளியேறியுள்ளது. சின்ஹட்ட போட்டி நடைபெற்ற அதே நேரத்தில்தான் அருகில் அதே பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டென்மார்க் வெற்றிபெற்றாலோ அல்லது சமனில் முடிவடைந்தாலோ துனிசியாவுக்கு அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் துனிசியா-பிரான்ஸ் ஆட்டம் முடியும் முன்னரே ஆஸ்திரேலியா-டென்மார்க் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதனால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனை வென்றாலும் துனிசியா அணியால் அதை பெரிய அளவில் கொண்டாட முடியாமல் போயுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!