Sports
மெஸ்ஸியை கொன்று விடுவேன்.. பகிரங்க மிரட்டல் விடுத்த மெக்சிகோ குத்துச்சண்டை வீரர்: காரணம் என்ன?
கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரை நோக்கியே இருக்கிறது.இந்த தொடரில் கத்துக்குட்டி அணிகளுடன் ஜாம்பவான் அணிகள் அடுத்தடுத்து முதல் லீக் போட்டியிலேயே தோற்றுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் நட்சத்திர அணிகளுக்கே சவாலாக இருந்து வருகிறது. மேலும் லீக் போட்டிகள் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டதால் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகள் பரபரப்பாக இருந்து வருகிறது.
இந்த தொடரில் முதல் போட்டியிலேயே சவூதி அரேபியாவுடன் தோற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ஜென்டினா அணி மெக்சிகோ அணியுடன் கட்டாயம் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் விளையாடியது.
இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தன்னை தக்கவைத்துக் கொண்டது அர்ஜென்டினா. இந்த வெற்றியை அடுத்து அர்ஜென்டினா வீரர்கள் தங்களது அறையில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இதில், உலக புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸி, மெக்சிகோ நாட்டின் கொடியை அவமதிப்பதுபோன்ற காட்சி இடம் பெற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மெஸ்ஸிக்கு பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் குத்துச்சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ்ஜீக் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்த அவர், "நமது கொடியைப் பயன்படுத்தி மெஸ்ஸி தரையைத் துடைத்துள்ளார். அர்ஜென்டினாவை நான் மதிப்பதுபோல், மெக்சிகோவை அவர் மதிக்க வேண்டும். நான் மெஸ்ஸியை எங்காவது பார்த்தால் கார் ஏற்றி கொலை செய்து விட வேண்டாம் என கடவுளிடம் அவர் வேண்டிக் கொள்ளட்டும்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு