Sports
#FIFA2022 : மெஸ்ஸி கூட போய் செல்பி எடுக்கப்போறீங்களா? - சவூதி வீரர்களை வெறியேற்றிய கோச் (Video)
உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி தனது முதல் போட்டியில் சவூதி அரேபியாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் அர்ஜென்டினா சவூதி அரேபியாவை ஊதித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் தொடக்கம் முதலே அர்ஜென்டினாவின் கைதான் ஓங்கி இருந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் பாரடேஸை சவூதி அரேபிய வீரர் பெனால்டி பகுதியில் கீழே தள்ளி விட்ட நிலையில், அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தார்.
ஆனால் இது இரண்டாம் பாதியில் அப்படியே மாறியது. ஆட்டத்தின் 47-வது நிமிடதட்டில் சவூதி அரேபிய வீரர் சலாஹ் அல் ஷெக்ரி ஒரு கோலும் 52-வது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலீம் அல் டவ்சரி மற்றொரு கோலும் அடித்தனர். இதற்கு அர்ஜென்டின அணியால் பதில் கோல் அடிக்கமுடியாத நிலையில் சவூதி அரேபிய 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் சவூதி அரேபிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் பார்க்கப்படுகிறார்.பயிற்சியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றிய இவர் கடந்த 2019-ம் ஆண்டில் சவுதி அரேபிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அத்னபின்னர் சவூதி அரேபிய அணி சிறப்பாக செயல்பட்டு உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது வலுவான அர்ஜென்டின அணியை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டின அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது இடைவேளையின்போது பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட் சவுதி அரேபிய வீரர்களுக்கு ஆற்றிய உரை தற்போது வைரலாகிவருகிறது.
அதிலும் மெஸ்ஸியின் பின்னால் சென்று அவரோடு செல்பி எடுக்கிற மாதிரி விளையாட்றிங்க்… நீங்கள் அவனை எதிர்த்து ஆடுகிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா…? போன்ற டையலாக்குள் படத்தின் வரும் உணர்ச்சியூட்டும் காட்சிகளை போல இருப்பதாக சமூகவலைத்தள வாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு