Sports
#FIFA2022:போட்டியை பார்க்க போலி ரசிகர்கள்..பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருகிறதா கத்தார்? தொடரும் சர்ச்சை!
கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஈக்வடார் அணி போட்டியை நடத்தும் நாடான கத்தாரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானையும் நெதர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஆப்ரிக்க சாம்பியன் செனக்கல் அணியையும் வீழ்த்தியது.அதைத் தொடர்ந்து அமெரிக்கா வேல்ஸ் அணிகள் மோதிய போட்டி 1-1 என சமனில் முடிவடைந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கத்தார் மற்றொரு குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. கத்தாரில் நேற்று நடந்த உலகக்கோப்பை தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளின் உடைகளை அணிந்துகொண்டு ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளிவந்தது.
ஆனால், அப்படி வந்த ரசிகர்கள் உண்மையில் சம்மந்தப்பட்ட கால்பந்து அணிகளின் ரசிகர்கள் இல்லை என்றும், வந்தவர்களின் பெரும்பாலானோர் கத்தார் நாடு கூலிக்கு அழைத்துவந்த ஆட்கள் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நிலவும் உடை, மதுபானம் போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளின் ரசிகர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக தொடக்கவிழாவில் ஆட்கள் இல்லை என்றால் அது போட்டியை நடத்தும் நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கத்தார் ஆசிய, மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை வைத்து கூட்டம் சேர்த்து என்று குற்றச்சாட்டப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதிய போட்டியில் முதல் பாதி நேரம் முடித்ததும் பல இருக்கைகள் காலியாக இருந்த புகைப்படங்கள் வெளியானது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?