Sports
”இந்த வீரரை இவ்வளவு பில்டப் கொடுத்து அழித்துவிடாதீர்கள்”- இந்திய வீரர் குறித்து எச்சரித்த ஜாண்டி ரோட்ஸ் !
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில்பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் 296 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி சாதனைப் படைத்தார். அதேபோல பந்துவீச்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இளம் வீரர் அர்ஷதீப் சிங் அசத்தினார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்திய அவர் அதன் பின்னர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக அவரை வாசிம் அக்ரம் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பாராட்டினர். மேலும் அவரை சில ரசிகர்கள் முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திரன் வாசிம் அக்ரமுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அர்ஷ்திப் சிங்கை வாசிம் அக்ரமுடன் ஒப்பிட்டு அவருடைய வாழ்க்கையை வீணடித்து விட வேண்டாம் என்று தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “'அர்ஷ்திப் சிங்கை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமுடன் ஒப்பிட்டு பேசுவது அவருக்கு நெருக்கடியை கொடுக்கும், கடந்த இரண்டு வருடத்தில் அர்ஷ்திப் சிங்கின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது, பும்ராவை விட வெகு விரைவிலேயே அர்ஷ்திப் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.
இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வெளியிலிருந்து பாராட்டும் ஒரு சிலர் இவரை யாருடனும் ஒப்பிட்டு பாராட்ட வேண்டாம். அப்படி செய்யும் பட்சத்தில் அது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்ரி அது அவரின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?