Sports

#IPL 2023 - அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக வீரர்கள்.. தக்கவைத்துக் கொண்ட 9 பேர்: முழு தகவல் இங்கே!

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியல் தொடர்பான தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த வகையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டுவைன் பிரோவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன், ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஆசிப் ஆகிய 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மும்பை அணியிலிருந்து பொல்லார்ட், சஞ்சய் யாதவ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த கேன வில்லியம்சன் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் சேர்த்து பூரானும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்படி அடுத்தடுத்து தங்களது அணி வீரர்களை அந்த அணி நிர்வாகத்தின் விடுவித்து வருகின்றனர். இதில் விடுவிக்கப்படும் வீரர்கள் ஏலத்தின் போது மாற்று அணியினர் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் எந்தெந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர், தக்கவைத்துக் கொண்டனர் என்பதைப் பார்ப்போம்:-

மும்பை அணியின் பல வெற்றிக்கு உதவிய அஸ்வின் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். அதேபோல் மும்பை அணியிலிருந்த சஞ்சய் யாதவும் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னை அணியிலிருந்த என்.ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியிலிருந்த பாபா இந்திரஜித் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், ரூ.8 கோடிக்கு எடுக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தரை ஐதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது. மேலும் ஷாரூக்கான் (பஞ்சாப்), வருண் சக்கரவர்த்தி (கே.கே.ஆர்), தினேஷ் கார்த்திக் (ஆர்.சி.பி), ஆர்.எஸ்வின் (ராஜஸ்தான்), நடராஜன் (ஐதராபாத்) சாய் கிஷோர், விஜய் சங்கர், சாய் சுதர்சன் ஆகியோரை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது. மேலும் இதுவரை ஐ.பி.எல் தொடரில் விளையாடாத தமிழக வீரர்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் தேர்வாக வாய்ப்புள்ளது.

Also Read: IPL 2023.. கேப்டனாக மீண்டும் 'தல' தோனி: 8 வீரர்களை அணியிலிருந்து விடுவித்த CSK - யார் அவர்கள்?