Sports
"யாருக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை".. ஆவேசத்துடன் பதிலடி கொடுத்த இந்திய வீரர்!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது.இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை டி20 போட்டிகளில் மட்டும் மீண்டும் களமிறக்கலாமா என BCCI ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அளவிற்கு இந்திய அணியின் தோல்வி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் வெள்ளை பந்து விளையாட்டில் இந்திய அணி மிகவும் குறைவான செயல்பாட்டைக் கொண்ட அணி என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார். இவரின் இந்த கருத்திற்கு நியூசிலாந்து தொடரில் டி20 போட்டிக்கு கேப்டனாகியுள்ள ஹர்திக் பாண்டியா பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா, நாங்கள் நன்றாகச் செயல்படவில்லை என்றால் அதை மக்கள் வெளிப்படுத்துவார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மக்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். நாங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
டி20 உலகக் கோப்பையில் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டியுள்ளது. முன்னோக்கிச் செல்லும்போது நாங்கள் அதனைச் சரி செய்து கொள்வோம் என பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!