Sports
ICC-யின் சிறந்த அணி வெளியீடு.. இவருக்கு அணியில் இடமா ? கோப்பையை இழந்தாலும் கெத்து காட்டும் இந்தியா!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல அடிலைட்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டு 13 விக்கெட்டுகள் வீழ்த்திய சாம் கரண் தொடர் நாயகன் விருதை வென்று அசத்திய நிலையில், தற்போது உலகக்கோப்பைக்கான சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த அணியில், 2 இந்திய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் 6 போட்டிகளில் 98.66 சராசரியில் 296 ரன்கள் எடுத்து தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி, மற்றும் ஆறு போட்டிகளில் 59.75 சராசரி மற்றும் 189.68 ஸ்ட்ரைக் ரேட், மூன்று அரைசதங்கள் உட்பட 239 ரன்கள் குவித்த சூரியகுமார், மற்றும் 12 -வது வீரராக ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்,
மேலும், கோப்பையை இங்கிலாந்து சார்பில், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ்,சாம் கரண், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானில் இருந்து ஷதாப் கான், ஷாகின் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஹசரங்கா ஆகியோர் இந்த அணியில் இடம்பெறாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசியின் சிறந்த அணி : ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் பில்ப்ஸ், சிக்கந்தர் ராசா, சாம் கரண், ஷதாப் கான், அண்ட்ரு நோர்ட்யே, மார்க் வுட், ஷாகின் அப்ரிடி, 12 -வது வீரர் ஹர்திக் பாண்டியா.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?