Sports
"ரோஹித் இல்லை, இந்திய அணியில் இருந்து இவர் விலகினால் எல்லாம் சரியாகும்" - ஹர்பஜன் சிங் அதிரடி கருத்து !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் அடிலைட்டில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் களத்தில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர்வந்த இந்திய அணியின் நாயகம் சூர்யகுமாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா மற்றும் கோலி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். பின்னர் கோலி அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அரைசதத்தை கடந்தார். அரைசதமடித்த கையோடு கோலி ஆட்டமிழக்க இறுதியில் ருத்திர தாண்டவம் ஆடிய ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ்,பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த இணை 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் குவித்தது.அதன்பின்னும் அபாரமாக ஆடிய இந்த ஜோடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்து இறுதிசுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியின் இந்த அவமானகரமான தோல்வியை பல்வேறு முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணித்தலைவர் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐயை பலர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா பேசியுள்ள ஹர்பஜன் சிங், " இந்திய அணிக்கு கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். அதிலும் டி20 போட்டிகள் பற்றி நன்கு அறிந்த ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். அணியில் கேப்டன் விலகினால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அணியில் இருந்து ஒருவர் விலகவேண்டும் என்றால் அது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான். ராகுல் டிராவிட் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு என்றாலும் அவரின் கிரிக்கெட் அறிவு தற்போதைய காலகட்டத்திற்கு பொருந்தவில்லை. அதனால் அவர் பதவி விலக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?