Sports
”ஒரு அணியில் இத்தனை கேப்டன்கள் இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்”- இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்!
இந்திய அணியின் 3 வகை போட்டிக்கும் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி டி-20 போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு அடுத்து, ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் போட்டி கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.
விராட் கோலி கேப்டனாக இருந்த தருணத்தில் அவர் இல்லாத போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் ரோஹித் சர்மா இந்திய அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரோஹித் சர்மா தவிர்த்து இந்த ஆண்டில் மட்டும் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் அணியை வழிநடத்தியுள்ளனர். அதுதவிர தினேஷ் கார்த்திக்கும் ஒரு பயிற்சிப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
தற்போது இந்திய அணி உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ”இந்த ஆண்டு இந்தியாவுக்காக எத்தனை தொடரில் ரோஹித் சர்மா விளையாடியுள்ளார்? இந்திய அணிக்கு இந்த ஆண்டில் மட்டும் நிறைய கேப்டன்கள் இருந்துள்ளார்கள். 7 பேர் இருந்தால் அணியை வழிநடத்துவது கடினம். ஒரு கேப்டன் தனக்கு கீழ் உள்ள அணியுடன் தொடர்ந்து ஒரு வருடமாவது பயணிக்க வேண்டும். ஒரு அணியை கட்டமைப்பது கேப்டனின் பொறுப்பு. இந்திய அணி இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்க இதுவும் ஒரு காரணம்” என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?