Sports
"ஆஸ்திரேலியாவில் நான் சிறப்பாக ஆட இதுதான் காரணம்" - அஸ்வினிடம் ரகசியத்தை பகிர்ந்த சூர்யகுமார் !
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
விராட் கோலி ஒருபுறம் சீராக ரன்கள் சேர்க்க சூர்யகுமாரோ நாலாபக்கமும் சுழன்று சுழன்று ஆடி வருகிறார். நெதர்லாந்துக்கு எதிராக 25 பந்துகளில் 51 ரன்கள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக 40 பந்துகளில் 68 ரன்கள், கடைசியாக நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடித்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
இவரின் இந்த ஆட்டத்தை பல வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர். 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் கூட சூரியகுமாரை புகழ்ந்துள்ளார். இந்த நிலையில், ரவி அஸ்வின் உடனான உரையாடலில் பல்வேறு விஷயங்கள் குறித்த சூரியகுமார் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், "எல்லோரும் என்னிடம் நீங்கள் இதுவரை ஆஸ்திரேலியாவுக்குப் போகாத நிலையில், வேகமான பவுண்டரி ஆடுகளங்கள் மற்றும் பெரிய மைதானங்களுக்கு நீங்கள் உங்களை எப்படி தயார் செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். நான் மும்பை வான்கடேவில் உள்ள சிறந்த பவுன்ஸ் மற்றும் வேகமான இயல்புடைய டிராக்கில் நிறைய பயிற்சி செய்துள்ளேன். அதனால் என்னால் ஆஸ்திரேலியாவில் இயல்பாக ஆடமுடிகிறது.
ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்களில் தனது பேட்டிங்கை வெளிப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது போன்ற பவுன்சி மற்றும் பெரிய மைதானங்களில் பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன், அதில் பெரிய இடைவெளிகளைப் பார்ப்பதால், பந்தை அங்கு விரட்டுவது எனக்கு சுலபமாக இருக்கிறது. இது போன்ற இடைவெளிகளில் ரன்களை ஓடியும் எடுக்க பிடித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?