Sports
"இப்போ நெதர்லாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்துகொள்ளுங்க"-பாகிஸ்தான் நடிகையை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. முன்னதாக குரூப் 2 பிரிவு போட்டியில் இறுதிநாளில் தென்னாபிரிக்கா -நெதர்லாந்து, பாகிஸ்தான் -வங்கதேசம், இந்தியா -ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இதில் தென்னாபிரிக்கா அல்லது இந்தியா தோற்றால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
இதில் நெதர்லாந்து அணியை தென்னாபிரிக்கா எளிதில் வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தி இருந்ததால் இந்தியாவை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அப்போது பிரபல பாகிஸ்தான் நடிகையான ஷேகர் ஷின்வாரி என்பவர் ஜிம்பாப்வே அணி இந்தியாவை வீழ்த்தினார் அந்நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்வேன் என கூறி அதிரடி காட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், எதிர்பாராத விதமாக நெதர்லாந்து அணியை தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த அணி வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அடுத்து நடந்த இந்தியா -ஜிம்பாப்வே போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்த நிலையில்,பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரிவை வைத்து இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதாவது ஜிம்பாப்வே இந்திய அணியை வீழ்த்தாத நிலையில் நெதர்லாந்து தென்னாபிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதன் காரணமாக ஷேகர் ஷின்வாரி நெதர்லாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்யவேண்டும், அதுதான் நெதர்லாந்து அணிக்கு செய்யும் மரியாதை என்று கூறி நேற்றில் இருந்து அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?