Sports
"உங்களுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னியா" - பாகிஸ்தானை விமர்சிக்கும் ரசிகர்கள் !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. முன்னதாக குரூப் 2 பிரிவு போட்டியில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் இன்று மோதின. இதில் வெற்றிபெறும் அணியே அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்களே குவித்தது. இதனைத் தொடர்ந்து 128 ரன்களை இலக்காக வைத்து ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் வங்கதேசம் பேட்டிங் செய்தபோது பெரும் சர்ச்சை எழுந்தது.
வங்கதேச அணி 73 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்த நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிபுல் ஹசன் களத்துக்கு வந்தார். அப்போது ஷதாப்கான் வீசிய பந்தில் அவருக்கு lbw அவுட் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் முறையீடு செய்த நிலையில், ரீப்ளேவில் நாட் அவுட் என தெரியவந்தது. அதாவது பந்து முதலில் பேட்டில் பட்டது போல தெரியவந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு வகையில் இந்த விக்கெட்டே ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதன்பின்னர் வந்த வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்த நிலையில், இறுதியில் வங்கதேச அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்தியா விளையாடிய ஆட்டங்களில் நடுவர்கள் செய்த தவறுக்கு ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அப்ரிடி போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் அந்நாட்டு ரசிகர்கள் குற்றம் சாட்டிய நிலையில், சமூக வலைத்தளத்தில் நடுவரின் தீர்ப்பு சரியே என பாகிஸ்தான் ரசிகர்கள் கூறிவந்தனர்.
அதன் உச்சமாக இது குறித்து பேசிய பாகிஸ்தான் வீரர் ஷதாப்கான் ஷகிபுல் ஹசன் விவகாரத்தில் நடுவர்கள் அவுட் கொடுத்து விட்டனர். நடுவர்கள் அவுட் என்று சொன்னால் நீங்கள் வெளியேறிவிட வேண்டும்.நடுவர்கள் சொல்வதே இறுதியானது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய ரசிகர்கள் உங்களுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்டினியா என ஷதாப்கானையும் பாகிஸ்தான் ரசிகர்களையும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!