Sports
எப்படி ஒரு அணியால் எப்போதுமே சோக் ஆகமுடியும்?- வழக்கம்போல உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய தென்னாபிரிக்கா!
உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தென்னாபிரிக்க அணியின் உலகக்கோப்பை கதையை கேட்டால் நம்பாதவர்களுக்கு கூட அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வரும். அப்படிப்பட்ட சோகக்கதை தான் தென்னாபிரிக்க அணியின் உலகக்கோப்பை பயணம்.
எப்போதுமே உலகக்கோப்பையை வெல்லும் அணியாகவே உலகக்கோப்பையில் அந்த அடியெடுத்து வைக்கும். ஆனால் இறுதியில் நம்பவே முடியாத அளவு வித்தியாசமாக ஏதும் நடந்து தொடரில் இருந்து வெளியேறுவார்கள். அதிலும் அவர்களுக்கு என்று இயற்கையும் சதி செய்யும்.
அந்த அணி கலந்துகொண்ட 1992-ம் ஆண்டு உலககோப்பையில் அரை இறுதிச் சுற்றில் 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்னும் வலுவான நிலையில் தென்னாபிரிக்க இருந்தது. ஆனால் அப்போது திடீரென மழை பெய்த நிலையில்,டக்வோர்த்-லூவிஸ் முறைப்படி தென்னாப்பிரிக்காவுக்கு இலக்கு 1 பந்தில் 22 ரன்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்கா பரிதாபமாக வெளியேறியது.
அதன் பின்னர் 1996-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான காலிறுதியில் தோல்வியைத் தழுவியது. ஆனால் 1999-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் தென்னாபிரிக்க அணியின் தோல்வியை எப்போதும் மறக்கவே முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இறுதிக்கட்டத்தில் க்ளூசனர் அபாரமாக ஆடி அணியை வெற்றிபெற வைக்கப்போகும் தருணத்தில் நடந்த ஒரு ரன்அவுட் தென்னாப்பிரிக்காவை மட்டும் அல்ல உலககிரிக்கெட்டையே மாற்றிப்போட்டது.
இந்த வெற்றிக்கு பிறகு உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அதன் பின்னர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவும்வரை உலகசாம்பியனாக 10 ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தியது.
முதல் கோணல் முற்றும் கோணல்போல தென்னாபிரிக்கா இப்போதுவரை அந்த சோக்கர்ஸ் வேலையே ஒவ்வொரு உலகக்கோப்பையில் நன்றாக செய்து வருகிறது. இந்த உலகக்கோப்பையில் உலககோப்பையை வெல்லும் அணியாக தென்னாபிரிக்கா மதிப்பிடப்படாவிட்டாலும் இந்தியாவை வென்றபின்னர் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் அந்த இடத்தில் இருந்து நம்ப முடியாத அளவு அடுத்த இருபோட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது. அதிலும் நெதர்லாந்து அணியோடு தோல்வியடைந்து வெளியேறுவது எல்லாம் வேறு ரகம். அதற்காக நெதர்லாந்து அணி மோசம் என்று அர்த்தம் அல்ல, வேறு அணி இப்படி வெளியேறி இருந்தால் அது அதிர்ச்சி தோல்வியாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு வெளியேறியது தென்னாபிரிக்கா.. அதனை சோக்கர்ஸ் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு