Sports
இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான HERO.. ரசிகர்கள் கொண்டாடும் இந்த நபர் களத்தில் செய்தது என்ன ?
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான்,நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. அதேபோல தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது.
அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல் அதிரடியாக 50 ரன்கள் அடித்தார். அதேபோல் விராட் கோலியும் 64 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடுத்தது.
பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச துவக்க வீரர்கள் சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் சேர்ந்து அதிரடிகாட்டினர். 7 ஓவர் வரை விக்கெட் கொடுக்காமல் 66 ரன்களை சேர்த்திருந்தனர். மேலும் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட அனைவரது ஓவர்களிலும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார்.
வங்கதேச அணி 54 ரன்கள் அடித்திருந்தபோது 21 பந்தில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு தோல்வி பயம் காட்டினார். இப்படியே சென்றால் நீச்சம் வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. பின்னர் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டு 4 ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும் 85 ரன்கள் வங்கதேச அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
லிட்டன் தான் இன்னும் களத்தில் இருப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம் என வங்கதேச ரசிகர்கள் நினைத்திருந்தபோது திடீரென லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆனார். அவர் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிவரை வங்தேச அணி போராடிய 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு அணியில் இல்லாத ஒருவர் காரணமாக இருந்ததாக ரசிகர்கள் இணையதளத்தில் சிலாகித்து வருகின்றனர். மழையால் ஆட்டம் பாதியில் தடைபட்டு மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில், மைதானம் ஈரமாக இருந்தது. இதனால் இந்திய அணியின் வீரர்களுக்கு மைதானத்தில் கிரிப் கிடைக்காமல் பீல்டிங் செய்ய சிரமப்பட்டனர்.
அப்போது எல்லை கோடு அருகே வந்த ஒருவர் கையில் ஒரு பெரிய பிரஷை வைத்து இந்திய வீரர்களின் ஷூக்களை அவர் மாறி மாறி துடைத்தபடி வளம் வந்தார். இதனால் இந்திய அணி வீரர்கள் சிரமம் இன்று பீல்டிங் செய்தனர். ஒரு வகையில் இந்திய அணியின் வெற்றிக்கே இவரின் இந்த செயல்தான் காரணமாக இருந்தது.
போட்டி முடிந்தபிறகு இவர் யார் என்பதை ரசிகர்கள் தேடத்தொடங்கிய நிலையில் இவர் குறித்த தகவல் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதன்படி இவர் ரகு என்கிற ரகுவேந்திரா என்பதும், இவர் இந்திய அணியில் பந்துகளை த்ரோ செய்து பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதும் தெரியவந்தது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியில் இவர் உறுப்பினராக இருக்கும் நிலையில், நேற்றைய செயல்மூலம் இவர் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!