Sports
"போலி Mr Bean-ஐ அனுப்பியதற்கு பழிவாங்கிவிட்டோம்"-ட்விட்டரில் சண்டை போட்ட பாகிஸ்தான் ஜிம்பாப்பே தலைவர்கள்!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் சூப்பர் 12 பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. அதில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியையும் இந்திய அணி வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
அதேபோல இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்பே அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறும் நிலையில் உள்ளது. பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்பே அணியை அந்நாட்டு பொதுமக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே மிஸ்டர் பீன் குறித்த பேச்சு இந்த போட்டியில் அதிகம் பேசப்பட்டது. அதாவது உலகப்புகழ்பெற்ற காமெடி நடிகரான மிஸ்டர் பீன் தாப்பாத்திரத்தில் நடித்த ரோவன் அத்கின்சான் கடந்த 2016ம் ஆண்டு ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அங்கு உண்மையில் வந்ததோ மிஸ்டர் பீன் போல தோற்றமுடைய பாகிஸ்தானை சேர்ந்த ஆசிஃப் முகமது சென்று நிகழ்ச்சிக்காக தொகையையும் பெற்றுச்சென்றார். இந்த உண்மைக்கு உண்மையான மிஸ்டர் பீன்தான் வருகிறார் என அரசு சார்பில் பாதுகாப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், மக்கள் மிஸ்டர் பீனை காண பெரும் திரளாக வந்தனர்.
இறுதியில் அது போலி மிஸ்டர் பீன் என்று தெரியவந்த நிலையில், ஜிம்பாப்வே பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னர் ஜிம்பாப்வே ரசிகர் ஒருவர் ஜிம்பாப்வே மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். போலியான பாகிஸ்தான் பீனை எங்களிடம் அனுப்பினீர்கள். இதற்கு இந்த போட்டியின் மூலம் பழிதீர்க்கவுள்ளோம் என ட்வீட் செய்திருந்தார். இது இணையத்தில் வைரலாகியது.
தற்போது ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையில், ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் " ஜிம்பாப்வேவுக்கு இது மிகவும் சிறப்பான வெற்றி; வீரர்களுக்கு வாழ்த்துக்கள், அடுத்த முறை நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என பாகிஸ்தானை விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் சாரிஃப் "எங்களிடம் நிஜமான மிஸ்டர் பீன் இல்லை, ஆனால் நிஜமான கிரிக்கெட் இருக்கிறது. பாகிஸ்தானியர்களுக்கு விழுந்தால் பல மடங்கு எழுந்துவிடும் தன்மை அதிகம் இருக்கிறது" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் சூடான விவாதமாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!