Sports
9 ஓவர்களில் 106 ரன்கள்.. நம்பவே முடியாத வெற்றி வசப்பட்டது எப்படி? கோலியின் ஒற்றை ஷாட் நிகழ்த்திய அதிசயம்!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இனி இந்திய அணி அவ்வளவுதான் என நினைக்கும்போதுதான் அந்த மாயம் நடந்தது. ஆட்டத்தின் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. 9 ஓவர்களில் 106 ரன்கள் எடுக்கவேண்டும். இதே இந்தியா அல்லது ஆசிய மைதானங்களில் இந்த ஸ்கோரை அடிக்க வேண்டும் என்றால் அது எளிதுதான். ஆனால் போட்டி நடப்பது ஆஸ்திரேலியாவில். அத்தனை பெரிய மைதானத்தில் வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்த்து இலக்கை எட்டுவதென்பதே அசாத்தியம்தான். ஆனால் அந்த அசத்தியத்தை கோலி செய்து முடித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் ஆட்டத்துக்கு மாறிய இந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி ஜோடி, விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக ஆடியது. இறுதியில் 3 ஓவர்களில் 48 என்ற இலக்குக்கு அணியை கொண்டு வந்தது இந்த ஜோடி. ஷாஹீன் அப்ரிடி வீசிய அடுத்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை.
அடுத்த ஓவரை பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமான ஹாரிஸ் ரவுப் வீசினார். அவரின் ஓவரில் முதல் 4 பந்துகளில் 3 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில், 8 பந்துகளில் 28 ரன்கள் இலக்காக இருந்தது. முடிந்தது என்று நினைத்த அந்த நேரத்தில்தான் அந்த மாயம் நடந்தது. 5 பந்தை சிறப்பான லெந்தில் ஷாட்டாக வீசிய ஹாரிஸ் ரவுப் பந்தில் பேக் புட் வந்து பௌலரின் தலைக்கு மேல் நம்பமுடியாத ஒரு சிக்ஸரை அடித்தார் கோலி. பின்னர் இறுதி பந்தில் பிளிக் முறையில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார் கோலி.
இறுதி ஓவரை முஹம்மது நவாஸ் வீச முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார் பாண்டியா. 5 பந்துக்கு 16 ரன்கள் தேவை பட அடுத்து வந்த கார்த்திக் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்து 2 ரன்கள் ஓடி, தொடர்ந்த வந்த இறுதி ஓவரின் 4-வது சிக்ஸருக்கு விளாசி ஆட்டத்தை முழுக்க இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். இடுப்பு உயரத்துக்கு வந்த அந்த பந்தை நடுவர் நோ பால் என அறிவிக்க களத்தில் பரபரப்பு எகிறியது. அடுத்த பந்து வைட் ஆக, தொடர்ந்து வந்த ப்ரீ ஹிட் பந்து ஸ்டம்பை தாக்க அதன் மூலம் 3 ரன்கள் எடுத்தார் கோலி.
இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட தேவையில்லாமல் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். 1 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில், பந்துவீசிய நவாஸ் வைடாக வீச ஒரு ரன் கிடைத்தது. பின்னர் இறுதி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில், அஸ்வின் பந்தை அழகாக மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு, அந்த ஒரு ரன் எடுத்து இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 90 ஆயிரம் ரசிகர்கள் இருந்த அந்த மைதானத்தில் கோலி இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி ஆர்ப்பரிக்க இந்தியாவே கொண்டாட்டத்தில் மூழ்கியது. இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சரித்திர சாதனையை படைத்தது உலக கோப்பை எங்களுக்குதான் என சொல்லாமல் சொல்லியுள்ளது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!