Sports
டென்ஷனின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள்; கடைசி வரை திகில் காட்டிய இந்திய அணி: பாக்.வீழ்த்தி திரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்றில் இலங்கை,அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்பே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி தகுதி சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 12 பிரிவின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது. இதனையடுத்து அடுத்ததாக இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் தொடங்குகிறது.
போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதில் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்த நிலையில், அடுத்ததடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி இருவரும் சிக்சருக்கு விளாசினார். மேலும் கடைசி பந்தில் மீண்டும் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்ததால் ஒரே ஓவரில் 20 ரன்களை சேர்த்தது இந்தியா. ஆட்டத்தில் உற்சாகம் எழுந்த நிலையில், விராட் கோலி தனது அரை சதத்தை பூர்த்தி ஆட்டத்தில் கிங்-கோலியாக நின்றார்.
இறுதியில் 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், விராட் கோலியோடு இணைந்து நின்று உறுதியாக ஆடி ஹர்திக் பாண்ட்யா முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் ஆட்டத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக்கும் அதே ஓவரில் ஆட்டம் இழந்தார். முன்னதாக பதற்றத்தில் பாகிஸ்தான் அணி நோ பால் வீசியது. இதில் ஃப்ரீஹிட் கிடைத்த நிலையில், ஸ்டம்ப்பில் பந்து பட்ட நிலையிலும் இந்தியா அந்த பந்தில் 3 ரன்கள் எடுத்தது.
கடைசி பந்தில் இந்தியா 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசியாக களமிறங்கிய அஸ்வின் பொறுமையாக மிட் ஆஃப் திசையில் வந்த பந்தை ஆடிய வெற்றிக்குத் தேவையான அந்த கடைசி ரன்னை எடுத்தார். இந்த நிலையில், இந்தியா ஸ்கோரை சமன் செய்துவிட்டிருந்தது.
கடைசி பந்தை மீண்டும் வீசினார் நவாஸ். பந்தை அழகாக மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு, அந்த ஒரு ரன் எடுத்தார் அஸ்வின். தன்னுடைய ஃபார்முக்கு திரும்பி விராட் கோலியால் இந்திய அணி இன்று வெற்றி வாகையை சூடியுள்ளது.
இதற்கு முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 11 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் அவற்றில் 8 போட்டிகளில் இந்தியாவும், 3 போட்டியில் பாகிஸ்தானும் வென்றுள்ளது. இந்திய அணிக்காக 2004ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆனார் தினேஷ் கார்த்திக். ஆனால் அவருடைய கிரிக்கெட் பயணம் எளிதாக இருக்கவில்லை. அணிக்குள் வருவதும் போவதுமாகவே இருந்துவந்தார்.
2007ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். 7 ஆண்டு காலத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால் இப்போது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!