Sports
"இது தான் பாகிஸ்தான் அணியின் பலவீனம்.. அதை Target செய்யுங்கள்" -இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய கம்பீர் !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதல் தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
இதன் காரணமாக இந்த தொடர் எல்லா அணிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையே நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது.அடுத்ததாக இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியை வெல்ல இந்திய அணி பல்வேறு திட்டங்களை வகித்து வருகிறது. இந்த போட்டி தொடர்பாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் பாகிஸ்தான் அணியின் பலவீனத்தை பயன்படுத்தி அந்த அணியை வீழ்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் அணியின் 140 கி மீ வேகத்துக்கு வீசும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். மற்ற அணிகளில் இப்படி ஒரு அசுரக் கூட்டணி இல்லை. அந்த வகையில் அந்த அணியின் பந்துவீச்சு பலம் வாய்ந்தது. ஆனால் பாகிஸ்தானின் பேட்டிங் அவ்வளவு பலமாக இல்லை. '
அந்த அணியில் மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதனால் பாபர் ஆசாம்,ரிஸ்வான் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்தி அவர்கள் மிடில் ஆர்டரை ஆட வைக்க வேண்டும். அவர்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலிய மைதானங்களில் சிக்ஸ் எல்லை அதிகம் என்பதால் ஷாட் பிட்ச் பந்துகளை வீசி விக்கெட்களை வீழ்த்த முயற்சிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!