Sports
திக்திக் கடைசி ஓவர்.. 4 விக்கெட்: ஆட்டத்தின் போக்கையே மாற்றிக் காட்டிய இந்திய வீரர் முகமது ஷமி!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த தொடர் எல்லா அணிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையே நமீபியா அணியின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் சூப்பர் 12 போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்ற 8 அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்க்கொண்டது. முதலில் இந்திய அணி விளையாடியது. கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்ததால் இந்திய அணியால் 186 இலக்கை எட்ட முடிந்தது.
பின்னல் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதலில் இருந்தே அதிரடியாக விளையாடியது. ஆரோன் ஃபின் 76 ரன்கள் அடித்திருந்தபோது அவுட்டார். இவரின் விக்கெட்டை அடுத்தான் இந்திய அணிக்கு வெற்று வாய்ப்பை உறுதி செய்தது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் முகமது ஷமியின் பந்து வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் 4 விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
2007ம் ஆண்டு தொடங்கிய முதல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் கடும் முயற்சி செய்தும் இந்திய அணியால் மீண்டும் கோப்பையை வெள்ள முடியவில்லை. தற்போது 13 ஆண்டுகளாக நிறைவேறாத இந்த கனவை நிறைவேற்ற இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!