Sports
இப்போது தெரிகிறதா நாங்கள் யார் என்று ? -விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் !
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, 250 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. அணியின் டாப் ஆர்டர் வேகமாக சரிந்த நிலையில் சஞ்சு சாம்சன் (86 நாட் அவுட்), ஷ்ரேயாஸ் ஐயர் (50) ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்களால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவை என்றிருந்தபோது, தப்ராய்ஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில், இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 113 ரன்களை விளாசி அசத்தினர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் டி20 உலககோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளதால் இந்த தொடரில் இரண்டாம் நிலை அணியே பங்கேற்றது. இதனைக் குறிப்பிட்டு இது இந்தியா பி அணி என பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். ஆனால் அந்த விமர்சனத்துக்கு இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.
இதனிடையே இரண்டாவது போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன், முதல் போட்டியில் இந்திய அணியில் தோல்விக்கு பின்னர் வந்த விமர்சனங்கள் அனைத்தும் நான் கவனித்தேன். சில நேரங்களில் பலமிக்க அணியும் தோல்வியை தழுவும். எதிரணி வீரர்கள் ஒட்டுமொத்த அணியாக நன்றாக செயல்பட்டு இருப்பார்கள். விமர்சனங்களை வரவேற்கிறோம். அதற்காக முறையற்ற விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எங்களை இரண்டாம்தர அணியென விமர்சித்தார்கள். தற்போது புரிந்திருக்கும் நாங்கள் எப்படிப்பட்ட அணியென்று. முறையான விமர்சனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. எங்கள் வளர்ச்சிக்காக பேசுங்கள். குறைகூற வேண்டுமென்று பேசவேண்டாம்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!