Sports
"உலக சாதனை படைத்த இந்திய அணி" -பாகிஸ்தான் சாதனையை உடைத்து வெற்றிக்கொடியேற்றிய ரோஹித்தின் படை !
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மாவின் அணி மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் இருந்தது. ஓப்பனர்கள் ஆரம்பத்திலேயே வெளியேறிவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறப்பான இன்னிங்ஸை விளையாடி 'சேஸிங் கிங்' என்ற தன்னுடைய பெயரை நிரூபித்தார் விரார் கோலி.
ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்கினார் விராட். அவர்கள் இருவருமே அரைசதம் கடந்து அசத்த, மூன்று போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச டி20 தொடரை 2-1 என வென்றது இந்தியா.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 187 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. அந்த கடினமான இலக்கை துறத்திய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. இந்திய அணியின் ஓப்பனர்கள் கேஎல் ராகுல், கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருமே நான்கு ஓவர்களுக்குள்ளாகவே வெளியேறினர்.
ஆனால் அதன் பிறகு கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் 62 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று சிறப்பாக கம்பேக் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெரும் உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 21 வெற்றிகளை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது. அதன்மூலம் 021ம் ஆண்டு பாகிஸ்தான் அணி 20 வெற்றிகள் பெற்ற சாதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதோடு, 2021ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியா 14 போட்டிகளில் 2வதாக பேட்டிங் செய்துள்ளது. இதில் 13 முறை வெற்றிகரமாக இலக்கை விரட்டி வெற்றி கண்டுள்ளது. ஒரே ஒரு முறை தான் தோல்வியடைந்தது. இதன்மூலம் வெற்றிகரமாக இலக்கை விரட்டுவதில் இந்திய அணி புலியாக திகழ்ந்து வருகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?