Sports
"அவர் நீண்ட காலமாக தன்னை டெஸ்ட் போட்டிகளில் தொலைந்துவிட்டார்"- இளம்வீரரை குறிப்பிட்டு பேசிய ஹெய்டன் !
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பொசிஷனுக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய அணி இருவரையும் மாறி மாறி பயன்படுத்தியது. அதனால், இருவருக்குமே போதுமான போட்டிகள் கிடைக்கவில்லை. அவர்கள் இருவருமே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்திய அணி தினேஷ் கார்த்திக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே தெரிகிறது. அதற்கு காரணம் சமீப காலமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரிஷப் பண்ட் சொதப்பி வருகிறார். இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன் பேசியுள்ளார். தனியார் ஊடகத்துக்கு பேசிய அவர், "டி20 உலகக் கோப்பைக்கு ரிஷப் பண்ட்டை அணியில் நிச்சயம் வைத்திருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் ஒரு அற்புதமான வீரர். ஆனால் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ஒரு பெரிய மைதானம், அங்கு பந்தை மைதானத்தை விட்டு தொலைதூரத்திற்கு அடிக்கக்கூடிய வீரர் இருக்க வேண்டும்.
மைதானத்தில் குறிப்பாக விக்கெட்டின் பக்கங்களை கடந்து வெளியே அடிக்க குறைந்தபட்சம் 3-4 பவர் ஹிட்டிங்க் வீரர்களை அணியில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, அந்த பன்முகத்தன்மை ரிஷப்பிற்கு உள்ளது. அவர் இன்னும் கட்டுப்பாடாக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன், அவர் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொலைந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!