Sports

இந்திய ஒலிம்பிக் நாயகனுக்கு 'எக்ஸ்ட்ரா சார்ஜ்' போட்ட விமான நிறுவனம்.. கொதித்தெழுந்த ரசிகர்கள் !

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக செயல்பட்டவர் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்.

கேரளாவை சேர்ந்த இவர் இந்திய அணியின் தூணாக விளங்குகிறார். சமீப காலமாக இந்திய ஹாக்கி அணிஉலகளவில் பலமான அணியாக திகழ காரணமாக இருப்பவர் ஸ்ரீஜேஷ். இவர் தற்போது விமான நிலையத்தால் அவமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டிகோ நிறுவனம் ஸ்ரீஜேஷின் பேக்கிற்கு 'எக்ஸ்ட்ரா சார்ஜ்' போட்டுள்ள சம்பவம் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீஜேஷ் இண்டிகோ விமானத்தில் தனது கோல்கீப்பர் பேக்கை லக்கேஜ்ஜாக அனுப்பியுள்ளார். அப்போது அதற்கு 1500 ரூபாயையை எக்ஸ்ட்ரா சார்ஜ்ஜாக இண்டிகோ நிறுவனம் விதித்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) என்னை 41 இன்ச் ஹாக்கிஸ்டிக் கொண்டு விளையாட அனுமதித்துள்ளது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் 38 இன்ச்க்கு மேல் எதையும் எடுத்துச் செல்ல அனுமதி கொடுப்பதில்லை." என்று கூறியுள்ளார். அதோடு, கூடுதல் பேக்கேஜ் கட்டணத்திற்கான IndiGo ரசீது புகைப்படத்தையும், '#loot' என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் கீழ் பலர் இண்டிகோ விமான நிலையத்தை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: சட்டசபைக்குள் புகையிலை போடும் பாஜக MLA.. ரம்மி கேம் ஆடும் மற்றொரு பாஜக MLA.. -உ.பியில் அதிர்ச்சி !