Sports
"12 பந்துகள் மட்டுமே ஆடும் கார்த்திக் இந்திய அணிக்கு தேவையில்லை"- மீண்டும் வன்மத்தை காட்டிய கம்பீர் !
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் விக்கெட் கவுதம் கம்பீரிடம் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், கார்த்திக் இருக்கிறார்கள், இவ்ர்கள் இருவரில் யாரை அணியில் களமிறக்குவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள கவுதம் கம்பீர், "நான் கண்டிப்பாக ரிஷப் பண்ட்டையே தேர்வு செய்வேன். அவர்தான் எந்த இடத்திலும் ஆடக் கூடிய வீரர். தினேஷ் கார்த்திக் 10 முதல் 12 பந்துகள் விளையாடுவதையே விரும்புகிறார். அவர் முன்வரிசையில் இறங்க விரும்ப மாட்டார். 10 முதல் 12 பந்துகள் ஆடும் வீரர் அணிக்கு தேவையில்லை. அவருக்கு அணியில் வேலை என்ன? " என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அணியின் பினிஷெர் வேலை 15 பந்துகளில் அதிகம் ரன் குவிப்பதுதான். பினிஷெராக இறங்குபவர் எதற்காக மேலே இறங்க வேண்டும். உங்கள் வன்மத்தை எப்போதும் காட்டிக்கொண்டுதான் இருப்பீர்களா என அவரை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!