Sports

இந்தியா இலங்கை போட்டி.. தோனி இருந்திருந்தால்.. பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்த ரசிகர்கள் !

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் குரூப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.

பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை கடந்து திரில் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் ரோகித் மட்டும் 72 ரன்கள் குவித்த நிலையில் 20 ஓவர்களில் இந்திய அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை அபாரமாக வீசிய இளம் வீரர் அர்தீப் சிங்அருமையாக வீகேசி 2 பந்துகளுக்கு 2 ரன்கள் என கொண்டு வருவார்.

பின்னர் இறுதி ஓவரின் 5-வது பந்தை வீச அதை பேட்ஸ்மேன் மிஸ் செய்தார். பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கைகளில் செல்ல பேட்ஸ்மேன் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது பந்த் பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிய அது ஸ்டம்பில் படாமல் அர்தீப் சிங்கின் கைகளுக்கு செல்லும். அவர் மீண்டும் ஸ்டெம்பை நோக்கி எறிய அது ஸ்டம்பில் படாமல் செல்ல பேட்ஸ்மேன் மேலும் ஒரு ரன் எடுக்க இந்தியா அந்த போட்டியில் தோல்வியைத் தழுவும்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியோடு ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் தோனி பந்தை எறியமால் வேகமாக ஓடி வந்து ரன் அவுட் செய்து இந்திய அணியை வெற்றிபெற வைப்பார். அதைப்போல செய்யாமல் பந்தை வீணாக எறிந்து இந்திய அணியை தோல்வியடைய செய்துவிட்டார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: சிறுவனின் குடலில் 1 கிலோ புழுக்கள்.. வயிற்று வலி வந்தால் கவனம் வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை !