Sports

வருகிறது லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்.. 4 லீக் அணிகளின் கேப்டன் யார்? லெஜண்ட்ஸ்கள் யார்? முழு விவரம் உள்ளே !

கிரிக்கெட் அரங்கின் முன்னாள் நட்சத்திரங்கள் பங்குபெறும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடர் இந்தியாவில் செப்டம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 4 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடருக்கு முன்பாக நடக்கும் காட்சிப் போட்டியில் இந்தியா மகாராஜாஸ் அணி வேர்ல்ட் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் இந்தியா மஜாராஜாஸ் அணியை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தலைமை தாங்குவார். வேர்ல்ட் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக இயான் மோர்கன் செயல்படுவார். விரேந்திர சேவாக், கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன், ஹர்பஜன் சிங், பிரெட் லீ, ஜாக் காலிஸ், இர்ஃபான் பதான், மிட்செல் ஜான்சன், முத்தையா முரளிதரன், எஸ் ஶ்ரீசாந்த், டேல் ஸ்டெய்ன், ராஸ் டெய்லர், சமிந்தா வாஸ் என பல சர்வதேச நட்சத்திரங்கள் இந்தத் தொடரில் கலந்துகொள்கின்றனர்.

இந்தத் தொடரானது கொல்கத்தா, லக்னோ, டெல்லி, கட்டாக், ஜோத்பூர் என 5 இந்திய நகரங்களில் நடக்கிறது. மனிபால் டைகர்ஸ், பில்வாரா கிங்ஸ், இந்தியா கேபிடல்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ் என மொத்தம் 4 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு விரேந்திர சேவாக் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இந்தியா கேபிடல்ஸ் அணியை கௌதம் கம்பீரும், பில்வாரா கிங்ஸ் அணியை இர்ஃபான் பதானும் தலைமை தாங்குவார்கள். மனிபால் டைகர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

16ம் தேதி நடக்கும் அந்த முதல் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளின் விவரம்

இந்தியா மஹாராஜாஸ்: சௌரவ் கங்குலி (கேப்டன்), விரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், எஸ் பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), அஷோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர் பி சிங், ஜொகிந்தர் ஷர்மா, ரீதிந்தர் சிங் சோதி.

வேர்ல்ட் ஜெயின்ட்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), லெண்டில் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூர்யா, மேட் பிரியர் (விக்கெட் கீப்பர்), நாதன் மெக்கல்லம், ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மஷ்ரஃபீ மொர்டாசா, ஆஸ்கர் ஆஃப்கன், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கெவின் ஓ பிரயன், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்).

லீகில் பங்கு பெறும் 4 அணிகளின் விவரம்

குஜராத் ஜெயின்ட்ஸ்: விரேந்திர சேவாக் (கேப்டன்), பார்த்திவ் படேல், அஜந்தா மெண்டிஸ், மன்விந்தர் பிஸ்லா, அஷோக் திண்டா, டெண்டில் சிம்மன்ஸ், டேனியல் வெட்டோரி, கெவின் ஓ பிரயன், ஸ்டுவர்ட் பின்னி, மிட்செல் மெக்லனகன், எல்டன் சிகும்பரா, கிறிஸ் டிரெம்லர், ரிச்சார்ட் லெவி.

இந்தியா கேபிடல்ஸ்: கௌதம் கம்பீர் (கேப்டன்), மஷ்ரஃபீ மொர்டசா, ஹாமில்டன் மசகட்சா, ரஜாத் பாடியா, லியாம் பிளங்கட், மிட்செல் ஜான்சன், ஆஸ்கர் ஆஃப்கான், ரவி போபாரா, பிரவீன் தாம்பே, தினேஷ் ராம்தின், ஃபர்வீஸ் மஹரூஃப், ஜாக் காலிஸ், பன்கஜ் சிங்.

பில்வாரா கிங்ஸ்: இர்ஃபான் பதான் (கேப்டன்), யூசுஃப் பதான், மான்டி பனேசர், நமன் ஓகா, வில்லியம் போர்டர்ஃபீல்ட், ஷேன் வாட்சன், எஸ் ஶ்ரீசாந்த், நிக் காம்ப்டன், மேட் பிரியர், சமித் படேல், ஃபிடெல் எட்வார்ட்ஸ், சுதீப் தியாகி, டினோ பெஸ்ட், ஒவெய்ஸ் ஷா, டிம் பிரெஸ்னன்

மனிபால் டைகர்ஸ்: ஹர்பஜன் சிங் (கேப்டன்), பிரெட் லீ, முத்தையா முரளிதரன், ஃபில் மஸ்டர்ட், முகமது கைஃப், பர்விந்தர் அவானா, ரீதிந்தர் சிங் சோதி, ரொமேஷ் கலுவிதாரானா, டிமிட்ரி மஸ்கரனஸ், லான்ஸ் குளூஸ்னர், ரயான் சைட்பாட்டம், ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப்.

Also Read: பிரேசில்: "வளர்க்க கஷ்டமா இருக்கு.. எனக்கு வேற வழி தெரியல.." :பெற்ற தாயே 2 குழந்தைகளுக்கு செய்த கொடூரம்!