Sports
”கோலி கிரிக்கெட் பற்றி பேச விரும்பவில்லை,அதில் இருந்து விலகி இருக்கிறார்”-முன்னாள் பயிற்சியாளர் ஆதங்கம்!
2022 ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரம் தொடங்குகிறது. இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 28ம் தேதி விளையாடுகிறது. இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார். சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்வில் இருந்த அவர், சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப் பயணங்களில் பங்கேற்கவில்லை.
கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் மிகவும் தடுமாறிக்கொண்டிருக்கிறார். 2022 ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த சீசன் ஆடிய 16 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்தார் கோலி. அதன்பிறகு நடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணமும் அவருக்கு நன்றாக செல்லவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்களிலும் சேர்ந்து 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், ஒருமுறை கூட 20 ரன்களைத் தாண்டவில்லை.
இந்திய அணிக்கு கோலி மீண்டும் வந்திருப்பது அனைவருக்கும் பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. 33 வயதான விராட், இந்த பிரேக்குக்குப் பிறகு புத்துணர்வோடு வந்து மீண்டும் தன் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முன்னாள் இந்திய ஆல் ரவுண்டரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் சமீபத்தில் கோலியைப் பற்றி பேசியிருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் அவருடன் நெருக்கமாக பணியாற்றிய பங்கர், இந்த மூன்று வார விடுப்புக் காலத்தில் கிரிக்கெட் பற்றி எதுவும் பேசக்கூடாது என்பதில் கோலி தீர்க்கமாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும் இப்போது புத்துணர்வான மனநிலையோடு அவர் களம் காணுவார் என்றும் சொல்லியிருக்கிறார் பங்கர்.
"அவர் அனைத்தையும் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவார். இடையில் பல முறை அவர் பிரேக் எடுத்தார். ஆனால் அவற்றையெல்லாம் பிரேக் என்று சொல்லிவிட முடியாது. இப்போது மூன்று வாரங்களுக்கு அவர் பிரேக் எடுத்திருக்கிறார். இந்த விளையாட்டில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார்" என்று சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சஞ்சய் பங்கர்.
"அவர் கிரிக்கெட் பற்றி பேசவே விரும்பவில்லை. அவர் பக்கம் இருந்து பார்த்தால், அவர் எந்த மாதிரி விளையாட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் எனப் புரிகிறது. விராட் கோலி சிறப்பாக விளையாடியது அவர் அவராக இருந்த காலத்தில் தான். இந்த உலகம் பார்க்க நினைக்கும் விளையாட்டு வீரராகவோ, மனிதராகவோ அவர் இருக்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் தன்னை எப்படிப் பார்க்க நினைக்கிறார் என்பது தான் முக்கியம். அதில் விராட் கோலி மிகவும் தெளிவாக இருக்கிறார்" என்றும் கூறினார் சஞ்சய் பங்கர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் களமிறங்கினார், அது விராட் கோலி 100வது சர்வதேச டி20 போட்டியாக மையும். இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடும் இரண்டாவது இந்திய வீரர் அவர் தான். இதுவரை 132 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் ரோஹித் ஷர்மா தான் ஒட்டுமொத்தமாகவே இந்த ஃபார்மட்டில் அதிக போட்டிகளில் ஆடியவர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!