Sports

இதற்காக RR அணி உரிமையாளர் என் கன்னத்தில் அறைந்தார் : முன்னணி வீரரின் குற்றச்சாட்டால் IPL-க்கு சிக்கல் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

அதில் பணம் கொழிப்பதால் அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால் இதில் பங்கேற்க சர்வதேச வீரர்கள் அதிகம் காட்டி வருகின்றனர். அதேநேரம் ஐபிஎல் மேல் ஏராளமான குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் ஐபிஎல் உரிமையாளர் மீது குற்றசாட்டு ஒன்றை வைத்துள்ளார். ஓய்வுக்கு பின்னர் தனது சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ள அவர், அதில் நியூஸிலாந்து அணியில் நடக்கும் நிறவெறி குறித்து பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து ஐபிஎல் அணி உரிமையாளர் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக ராஸ் டெய்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள அவர், ராஜஸ்தான் அணியில் நான் விளையாடிய போது, ஒருமுறை பஞ்சாப் அணி 195 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அந்த போட்டியில் நான் ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட் ஆனேன். அதில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

அதன் பின்னர் அன்றைய இரவு ஷேன் வார்னே உள்ளிட்ட வீரர்கள் ஹோட்டலில் மது அருந்த சென்றோம். அப்போது ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள் என்னிடம், " டக் அவுட் ஆவதற்காக உங்களை பல கோடி கொடுத்து வாங்கவில்லை ராஸ்" எனக்கூறி தொடர்ந்து 3 -4 முறை எனது கன்னத்தில் அறைந்தார். மிகவும் ஓங்கி அறையவில்லை என்றாலும் அவர்கள் வேண்டுமென்றே கோபத்தில் அடிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். மற்றவர்கள் முன்பு சிரித்து சமாளித்துவிட்டனர். இது போன்ற சம்பவம் நிறைய நடந்துள்ளது" எனக் கூறியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இருக்கும் வித்தியாசம் இவர்தான்"- இந்திய வீரரை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்!