Sports
சச்சினின் மதிப்பு என்ன என்றே எனக்கு தெரியாது..ஆனால், அந்த சம்பவத்துக்கு பின்னர்..ஷோயப் அக்தர் ஓபன் டாக் !
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ம் தேதி பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இப்போதுதான் இந்த இரண்டு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன. அந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சனைகளால் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் தான் இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டிருக்கின்றன. அதனால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
இரண்டு அணிகளும் மிகப்பெரிய கிரிக்கெட் கலாசாரம் கொண்டவை. அதில் பல ரைவல்ரிகள் ரசிகர்களை ஈர்த்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் இருவருக்குமான ரைவல்ரி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று. களத்துக்கு வெளியே இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. இருந்தாலும் களத்தில் இவர்களுக்கு இடையிலான போட்டி பெரிய அளவு பேசப்பட்டது.
இருந்தாலும் தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கினுள் நுழைந்தபோது சச்சின் டெண்டுல்கரின் மதிப்பு என்று தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார். தன்னுடைய டீம் மேட் சக்லைன் முஷ்தாக் தான் டெண்டுல்கரின் மதிப்பை தனக்கு உயர்த்தியதாகவும் கூறியிருக்கிறார் ஷோயப் அக்தர்.
"சச்சின் டெண்டுல்கர் பற்றியும் அவருடைய மதிப்பு என்ன என்பது பற்றியும் எனக்கு சக்லைத் முஷ்தாக் தான் கூறினார். அதற்கு முன்பு சச்சின் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் என்னுடைய சுய உலகத்திலேயே தொலைந்திருந்தேன். அதனால் எனக்கு அவரைப் பற்றித் தெரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும், ஒரு பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார் என்பது பற்றி மட்டுமே அப்போதெல்லாம் எனக்குத் தெரியும்" என்று சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஷோயப் அக்தர்.
போட்டிகளின்போது தான் என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார் என்பதைப் பற்றியும் பேசியிருக்கிறார் அக்தர். வெறுமனே வேகமாகப் பந்துவீசி தனது அணிக்கு போட்டிகளை வென்று தருவதைப் பற்றி மட்டுமே தான் யோசித்துக்கொண்டே இருந்ததாகவும் கூறியிருக்கிறார் அவர்.
"இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவெனில் நாங்கள் வேகமாக பந்துவீசுவதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடிக்கொண்டே இருப்போம். எப்போதெல்லாம் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்று உணர்கிறேனோ அப்போதெல்லாம் 'நாம் இப்போது ஒரு ஸ்பெல் பந்துவீசினால், பேட்ஸ்மேன்களைப் பந்தாடி விக்கெட்டுகள் வீழ்த்தலாம்' என்று நினைப்பேன். அந்தத் தருணத்தில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்கு வென்றுகொடுப்பேன். ஒரு மேட்ச் வின்னராக இல்லையென்றால் உங்களால் ஒரு நட்சத்திரமாக மாற முடியாது. நாங்கள் எங்கள் நாட்டுக்கு பல போட்டிகளை வென்று கொடுத்தோம்" என்று கூறியிருக்கிறார் ஷோயப் அக்தர்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!