Sports

ஜிம்பாப்வேயில் இந்திய அணிக்கு நேர்ந்த பரிதாப நிலை.. போட்டியை ஒளிபரப்ப யாரும் இல்லாத சோகம் !பின்னணி என்ன ?

1983-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது கிரிக்கெட் அதிகாரபூர்வமற்ற இந்தியாவின் தேசிய விளையாட்டாக மாறியது. அதன்பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்ற இந்திய கிரிக்கெட் சச்சினின் வருகைக்கு பின்னர் உச்சத்தை தொட்டது.

இதனால் ஒருகாலத்தில் இந்திய அணி விளையாடும் போட்டியை நேரலை செய்ய தூர்தசனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திவந்த பிசிசிஐ பின்னர் அதே விளையாட்டு போட்டியை நேரலை செய்ய பல கோடி ரூபாய்களை பெற்றது.

அதிலும் ஐ.பி.எல் தொடர் வந்தபின்னர் பிசிசிஐ பலமழையில் குளித்தே வந்தது. ஆனால் இதுபோன்ற தொடர்கள் அதிகரித்ததால்தான் என்னவோ இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு மவுசு குறைந்துவருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணியோடு ஒரு நாள், டி20 தொடரில் ஆடியது. வழக்கமாக இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய விளையாட்டு சேனல்கள் கோடிகளில் கொட்டுவார்கள். ஆனால் மேற்கு இந்திய தொடரை ஒளிபரப்பு செய்ய எந்த சேனலும் முன்வரவில்லை.

இதனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப் போட்டிகளை தூர்தசன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வரும் 18ஆம் தேதி முதல் ஜிம்பாப்வே அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இந்த தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த முறையும் துர்தர்சன் சேனல்தான் இந்த போட்டியை ஒளிபரப்பு செய்யும் என்று கூறப்படுகிறது.

ஒருகாலத்தில் இந்திய அணி ஜிம்பாப்பே சென்றால் கூட அதை ஒளிபரப்பு செய்ய பல நிறுவனங்கள் போட்டிபோடும். ஆனால் தற்போது இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. எப்படி இருந்த இந்திய கிரிக்கெட் தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளதற்கு ஐபிஎல் போட்டிகள், முக்கிய வீரர்கள் இல்லாதது, டி20 போட்டிகளின் எழுச்சி ஆகியவையே காரணமாக கூறப்படுகிறது.

Also Read: "அவர் நிகழ்ச்சி நடத்தினால் அடிப்போம்" - பிரபல நகைச்சுவை நடிகரை மிரட்டிய பாஜக MLA ! காரணம் என்ன ?