Sports
"அவர்களிடம் பிச்சை எடுக்கவா முடியும் ?" - வீரர்கள் குறித்து மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளர் காட்டம் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
இது போன்ற தொடர்களில் வீரர்களுக்கு நல்ல ஊதியம் கிடைப்பதால் பல்வேறு நாடுகளின் வீரர்கள் இது போன்ற தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு வாரியம் உரிய சம்பளம் கொடுக்காத நிலையில் தவித்து வருகிறது.
இதனால் அந்நாட்டு வீரர்கள் மேற்கூறிய கிரிக்கெட் தொடர்களில் ஆடிவருகின்றனர். அந்நாடு சர்வதேச போட்டியில் ஆடினாலும் அதில் பங்கேற்காமல் வணிக ரீதியிலான தொடரில் ஆடவே அந்த நாட்டு வீரர்கள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இதனால் சிறிய நாடுகளுக்கு எதிர்ப்பான போட்டியில் கூட மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறி வருகிறது.
இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸிடம் செய்தியாளர்கள் சிலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் நாட்டுக்காக ஆடுவதை விட வேறு அணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிப்பதாக கூறினார். மேலும், வேறு அணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களிடம் நாட்டுக்காக விளையாடுங்கள் என பிச்சை எடுக்கவா முடியும்? என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?