Sports
தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை.. FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவதால் உலக அளவில் தமிழ்நாட்டின் பெருமை சென்று சேர்ந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE)துணைத் தலைவராகத் தமிழ்நாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் நாளை 8 தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரிக் டோகோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணைத் தலைவரான 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து விஸ்வநாதன் ஆனந்துக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !