Sports
"இந்தியாவிடம் இது இல்லை.. அவர்களை இந்த முறையும் வீழ்த்திவிடலாம்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கணிப்பு !
இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என போன்ற அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஆறாவது அணிக்கான தகுதி சுற்றில் தேர்ச்சி பெறும் அணி இந்தத் தொடரில் விளையாடும்.
இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணியும் குரூப் 'ஏ' சுற்று போட்டியில் விளையாடுகின்றன. அதேபோல 'பி' பிரிவில் வங்கதேசம்,ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்த ஆசிய போட்டி தொடர் 20 ஓவராக போட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதைப் போலவே இந்த முறையும் நடக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய youtube சேனல் பக்கத்தில்பேசியுள்ள அவர் , "சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் 7 மாதங்களில் 7 கேட்டன்கள் என்ற சீறற்ற சூழ்நிலை இருக்கிறது. இந்திய அணியில் விராட் கோலி இல்லை, ரோகித் சர்மா கே.எல் ராகுல் காயம் அடைகின்றனர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் கேப்டனாக செயல்படுகின்றனர்.
அந்த வகையில் அவர்கள் சிறந்த அணியை கட்டமைப்பதற்கு தடுமாறுகிறார்கள். இந்திய அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை வைத்து அவர்களால் உறுதியாக சிறந்த 16 பேர் கொண்ட அணியை உருவாக்க முடியாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியை உருவாக்குவதிலும் பிரச்சனை ஏற்படும்.
கடந்தாண்டு இதுபோன்ற தவறுகள் செய்ததாலேயே பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்று விட்டது. ஆகவே இந்த முறையும் அதே தவறை மீண்டும் செய்தால் இந்தியாவின் குறையை பயன்படுத்தி பாகிஸ்தான் அணி மீண்டும் வெல்லும் என்றே நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!