Sports

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை.. தேசிய சாம்பியனான தமிழக வீராங்கனைக்கு நேர்ந்த சோகம் !

2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் நடந்து வருகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்கும் 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை இந்தியா அறிவித்திருந்தது. இதில் தமிழக வீரர்களை தனலட்சுமி 200 மீட்டர் தடகளம் மற்றும், ரீலே போட்டியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் தமிழக வீராங்கனை தனலட்சுமி தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டடார்.

தனலட்சுமியின் ரத்த மாதிரியில் மெட்டாடியோனைன் என்ற தடை செய்யப்பட்ட பொருள் கண்டறியப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தனலட்சுமி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தடகள ஒழுங்குமுறை அமைப்பு(Athletics Integrity Unit) இந்த தடையை விதித்துள்ளது.

மேலும், கடந்த மே 1ஆம் தேதி தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வென்ற இருந்த பட்டமும் பறிக்கப்பட்டுள்ளது. அதே போல உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் இழந்துள்ளார். இந்த தகவல் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 5G ஏலத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? திமுக IT WING கேள்விக்கு யோக்கிய சிகாமணிகளே பதில் சொல்லுங்க!