Sports

"உலககோப்பை நடப்பது ஆஸ்திரேலியாவில்,அங்கு இந்திய அணியில் நடராஜன் இருக்கவேண்டும்"-முன்னாள் வீரர் கருத்து !

தமிழக வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். இதனால் இந்திய அணியின் கதவுகள் அவருக்கு திறந்தே இருக்கிறது. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது, இந்த தொடருக்கான அணியை உருவாக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் டி.நடராஜனை சேர்க்க வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் தானிஷ் கனேரியா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், இந்திய அணியில் டி.நடராஜன் மீண்டும் விளையாடுவதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆஸ்திரேலியாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் எப்போதும் செய்ய முடியும். மிகச்சிறந்த வீரர் அவர்.

இந்திய அணிக்கு தற்போது அட்டகாசமான பவுலிங் படை உள்ளது. நிறைய திறமையான வீரர்கள் வந்து போட்டி கடுமையாக உள்ளது. எனவே அணி நிர்வாகம் எப்படி அந்த வீரர்களின் திறமைகளை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம் என யோசிக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

Also Read: "என்னால் சேவாக்,சச்சின் போல இருந்திருக்க முடியாது"- தனது உளவியல் பிரச்சனை குறித்து மனம் திறந்த டிராவிட்!