Sports
”பேட்ஸ்மேன் திரும்பி ஆடுகிறாங்க.. பந்துவீச்சாளர்களுக்கும் சுதந்திரம் கொடுங்க” - கொந்தளிக்கும் அஸ்வின்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான இவர், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார்.
ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றை செய்து வரும் அஸ்வின், மன்கட் அவுட் முறையைப் பயன்படுத்தி ஐ.பி.எல் தொடரில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார். இந்த சம்பவத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும், தான் செய்தது சரியே என்று பேசிவந்த அஸ்வின், கிரிக்கெட் ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இருப்பதாக கூறினார்.
கிரிக்கெட் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த செயல் கிரிக்கெட் விதிமுறைகளையே மாற்றும் அளவு கொண்டு சென்றது. அஸ்வின் செய்த மன்கட் அவுட்க்கு பிறகு, மன்கட் முறையை ரன் அவுட் என்றும், அது போட்டி உணர்வுக்கு எதிரானது இல்லையென்றும் ஐ.சி.சி அறிவித்தது.
இந்த நிலையில், மீண்டும் அஸ்வின் தெரிவித்துள்ள கருத்து ஒன்று விவாதங்களை எழுப்பியுள்ளது. பேட்ஸ்மேன்கள் குறித்து பேசியுள்ள அவர், "பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஷாட் என அனைத்து சுதந்திரத்தோடும் ஆடுகிறார்கள், அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை, ஆனால், பந்துவீச்சாளர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கிறது.
தற்போதைய நிலையில்,பந்து பேட்ஸ்மேனின் இடது புறம் (லெப்ட்) பட்டு வந்து காலில் மோதினால் அது LBW-வாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும். அதிலும், பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஷாட் அடிக்கும்போது, பந்து எந்தப்பக்கம் பிட்ச் ஆகியிருந்தாலும் ஸ்டம்பில் படுமென்றால் எல்.பி.டபிள்யூ தரவேண்டும்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?