Sports
ஆஸ்திரேலியாவுடனான தொடரை ரத்து செய்த தென்னாப்பிரிக்கா.. உலகக்கோப்பை வாய்ப்பையும் இழக்கிறதா?
தென்னாப்பிரிக்க அணி டிசம்பர் - ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனவரி 12 முதல் 17 வரை நடக்கும் ஒருநாள் தொடரை ரத்து செய்வதாக தென்னாப்பிரிக்கா திடீரென அறிவித்துள்ளது.
ஐ.பி.எல் பாணியில் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாட்கள் இந்த தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 33 போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டி20 லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்கள் பங்கேற்றால் மட்டுமே அது பிரபலமடையும் என்பதால் இந்த தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்க வேண்டும் என அந்நாட்டு வாரியம் விரும்புகிறது. இதற்காக, ஒருநாள் தொடரை ஒத்திவைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தென்னாப்பிரிக்க வாரியத்தின் கோரிக்கையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை ரத்து செய்வதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தன்னிச்சையாக இந்த தொடர் ரத்து செய்யப்பட்டதால், ரத்து செய்யப்பட்ட 3 ஆட்டங்களுக்கான புள்ளிகளும் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும். இதன் காரணமாக 2023-ல் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் நேரடியாகத் தகுதி பெறுவதில் தென்னாப்பிரிக்க அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் நேரடியாக தகுதிபெறும். தற்போது, தென்னாப்பிரிக்க அணி இந்த பட்டியலில் 11-ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் 3 ஒருநாள் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்க அணி விளையாடாமல் போனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!