Sports
'இனி இவ்வாறு நடக்க கூடாது' -தினேஷ் கார்த்திக்கை எச்சரித்த பிசிசிஐ! காரணம் என்ன?
கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அபாரமாக ஆடிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சிறந்த பினிஷர் என்று பெயரெடுத்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணிக்கும் அவர் அழைக்கப்பட்டார்.
தென்னாபிரிக்க தொடரில் சிறப்பாக செய்யப்பட்ட தினேஷ் கார்த்திக், அடுத்த வந்த அயர்லாந்து அணிக்கு எதிராகவும் சிறப்பாக ஆடினார். பின்னர் இங்கிலாந்தில் இந்திய அணி ஆடிய பயிற்சி போட்டியில் இந்திய அணி கேப்டனாகவும் தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.
அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிர்ப்பாக இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தத்தளித்து கொண்டிருந்த போது ஜடேஜாவுடன் இணைந்து ஒரு பார்ட்நர்ஷிப்பை கட்டமைத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக ரன்அவுட் செய்யப்பட்டார். இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 20 ரன்கள் குறைவாக வந்தது.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கை பிசிசிஐ எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்ட பிசிசிஐ அதிகாரிகள்," கடந்த 2 போட்டிகளிலும் நீங்கள் சரியாக விளையாடவில்லை. அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் சிறப்பாக விளையாடி ஃபார்மை நிரூபித்தீர்கள். ஆனால் ரன் அவுட் விஷயங்களில் கவனம் தேவை.
2 வது டி20 போட்டியில் அந்த ரன் அவுட்டை உங்களால் தவிர்த்திருக்க முடியும். ஜடேஜாவுடன் சரியான புரிதல் இருந்திருந்தால், பிரச்சினை இருந்திருக்காது. மேலும் ரன் அவுட்டிற்காக டைவ் அடித்தீர்கள். அப்போது காயம் ஏற்பட்டிருந்தால், நிச்சயம் அணியிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியிருக்கும். எனவே ரன் எடுக்கும் போது கூடுதல் கவனமாக இருங்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !