Sports
CSK அணியில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா.. ஒரே நாளில் உண்மையை போட்டுடைத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டார். ஆனால் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன் பதவி கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அதைத் தொடர்ந்து தொடர் நிறைவடையும் முன்னரே கேப்டன் பதவியில் இருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டார். எம்.எஸ்.தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா குறித்த சர்ச்சை சென்னை அணி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணி கட்டாயப்படுத்தி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாகவும், இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் ஆட மாட்டார் எனவும் கூறப்பட்டது.
இது குறித்து ஜடேஜாவின் நண்பர் ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில், ஆமாம் சிஎஸ்கே அணியால் ஜடேஜா மன வருத்தத்தில் தான் இருக்கிறார் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி சதம் எடுத்த நிலையில் ஐபிஎல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அது குறித்து தான் இப்போது சிந்திக்கவில்லை எனக் கூறினார். இது அணி குறித்த அவரது நிலையை பிரதிபலிப்பதாக அமைந்தது.
பின்னர் எப்போதும் தோனியின் பிறந்தநாளுக்கு தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து சொல்லும் ஜடேஜா இந்தாண்டு அப்படி ஏதும் வாழ்த்து பதிவுகளை பதிவிடாமல் இருந்தார். இது சென்னை மற்றும் தோனி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கியுள்ளார். குறிப்பாக கடந்த 2021 மற்றும் 2022 தொடர்பான அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதையடுத்து சென்னை அணியுடன் அவருக்கு மனக்கசப்பு பகிரங்கமாகியுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு சென்னை அணியில் ஜடேஜா தொடரமாட்டார் என்பது 90% தற்போது உறுதியாகியுள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!