Sports
"சென்று எங்கள் பழைய RECORD-ஐ எடுத்து பாருங்கள்" -இந்திய அணிக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் எச்சரிக்கை!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் பந்த் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன் களும் குவித்தனர்.
ஆனால் இந்த போட்டியில் இவர்களை மீறி டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பும்ரா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிராட் ஓவரில் 29 ரன்களை குவித்து 28 ரன்களை குவிந்திருந்த லாராவின் சாதனையை முறியடித்தார்.
அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2ம் நாள் முடிவில் 84 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணியில் பந்த்-ஜடேஜா அமைத்த அபாரமான கூட்டணி போல இங்கிலாந்துக்கு அமைந்தால் மட்டுமே அந்த அணியால் ஆட்டத்தில் திரும்ப வரமுடியும் என்ற நிலை தற்போது காண்ப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து இங்கிலாந்தின் துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் பேசியுள்ளார். போட்டி முடிந்தபின்னர் இது குறித்து கூறிய அவர், ரிஷப் பண்ட் விளையாடிய விதத்திற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அவர் இந்த போட்டியில் அபாரமாக ஆடினார். ஆனால், அதற்காக நாங்கள் அஞ்சப்போவதில்லை.
4-வது இன்னிங்சில் எவ்வளவு இலக்கை துரத்த வேண்டும் என்பதை நினைத்து நாங்கள் பயப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டில் நாங்கள் விளையாடிய விதம் பற்றி அனைவரும் அறிவார்கள். முதல் இன்னிங்சில் எதிரணி என்ன இலக்கை நிர்ணயிக்கப் போகிறது என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?