Sports
40 ரூபாய்க்கு சிகிச்சை பெறும் எம்.எஸ்.தோனி.. வெளிவந்த தகவலால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தற்போது இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஓய்வு காலத்தை வீட்டில் தோட்டம் வைத்தும் அதில் விளையும் காய் கறிகளை விற்பனை செய்தும் வருகிறார்.
தோனி சமீப காலமாக மூட்டுவலி பிரச்சனையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இதற்காக தனது இல்லத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான லாபுங் என்ற கிராமப் பகுதியில் அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.
அந்த கிராமத்தில் இருக்கும் வந்தன் சிங் கேர்வார் என்ற ஆயுர்வேத மருத்துவர் அந்த பகுதியில் பிரபலமானவர். தோனியின் பெற்றோரும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று நல்ல பலனை கண்டுள்ளனர். இதன் காரணமாக தோனியும் இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.
நான்கு நாள்களுக்கு ஒரு முறை இந்த மருத்துவரிடம் தோனி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆலோசனை கட்டணமாக ரூ.20, மருந்துகளுக்கு ரூ.20 என மொத்தம் ரூ.40 மட்டுமே தோனியுடன் வாங்குவதாக மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் இருக்கும் இடத்துக்கு தேவையின்றி கூட்டம் வரக்கூடாது என்பதற்கான இந்த சிகிச்சை தோனியின் காரிலே நடைபெறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 40 ரூபாய்க்கு சிகிச்சை பெரும் தோனியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!