Sports

பிளாட்பாரத்தில் துணி விற்கும் சர்வதேச அம்பையர் - வாழ்வில் செய்த ஒரே தவறால் நேர்ந்த பரிதாப நிலை!

பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவூத் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, பின்னர் அம்பையராக பரிணமித்தார். முதலில் உள்நாட்டு போட்டிகளில் அம்பையராக பணிபுரிந்த இவர் பின், 2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் அம்பையராக செய்யப்படத் தொடங்கினார். அதன் உச்சமாக ஐ.சி.சியின் எலைட் பேனல் அம்பயர் குழுவில் உறுப்பினரானார்.

அதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளிலும் இவர் நடுவராக பணிபுரிந்தார். அப்போது 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அம்பயராக செயல்பட்ட ஆசாத் ரவூப் மீது சட்ட விரோத பந்தயம், ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.

இதன் காரணமாக மும்பை காவல்துறை இவர் மேல் வழக்கு பதிவு செய்தது. ஆனால் தன் மீதான குற்றசாட்டுகளை மறுத்த ஆசாத் ரவூப் விசாரணைக்காக இந்தியா வரவும் மறுத்துவிட்டார்.

இந்த வழக்கில் இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்ட நிலையில், பி.சி.சி.ஐ இவருக்கு ஐந்தாண்டு தடை விதித்தது. மேலும், சர்வதேச அம்பயர் குழுவிலிருந்து ஐ.சி.சியும் இவரை விடுவித்தது. இதன் காரணமாக இவரது அம்பயர் பயணம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் ஆசாத் ரவூப் பாகிஸ்தானின் லாகூர் நகர லன்டா பஜார் மார்க்கெட்டில் துணி மற்றும் வியாபாரம் செய்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது இந்த நிலைக்கு பல்வேறு தரப்பினரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ராணுவ வீரரை துப்பாக்கியால் சுட்ட மணமகன்.. திருமண நிகழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!