Sports
”IPL-க்காக இந்திய கால்பந்து நசுக்கப்படுகிறது”: கொதித்தெழும் இந்திய தலைமை பயிற்சியாளர்!
இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக குரோஷிய நாட்டைச் சேர்ந்த ஐகர் ஸ்டைமக் செயல்பட்டு வருகிறார். இவர் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த கால்பந்து குறித்து காட்டமான கருத்துக்களை ஐகர் ஸ்டைமக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர்,"ஆசியாவின் முதன்மையான 10 நாடுகளை விட நாம் 8-10 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறோம். எனக்கு இந்தியாவைப் பிடிக்கும், 2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணி தங்களாலும் முடியும் என்று உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் இந்திய அணிக்காக பயிற்சியை தொடங்கிய போது என் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்தது, தேசிய கால்பந்து அணியை மேலே கொண்டு வர அனைத்துத் தரப்பும் கூட்டிணையும் என்று கருதினேன்.
ஆனால் சிலர் தங்கள் சுயநலத்திட்டங்களில் ஈடுபட்டனர். சிலருக்கு இந்திய அணி முன்னேற என்ன செய்ய வேண்டும், எத்தனை காலம் பிடிக்கும் என்பது தெரியவில்லை. இந்திய அரசு கால்பந்துக்காக நிறைய செய்யவேண்டும். அனைத்து நாடுகளும் அயல்நாட்டு வீரர்களை அழைக்கின்றனர். இந்தியா அப்படி செய்யாததே அணியின் நலனுக்கு ஒரு முடக்கம்தான்.
இந்திய அணியை பெரிய அணியாக்கிக் காட்ட எனக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை, எனவே நான் என் பணியில் கவனம் செலுத்தினேன்.எங்கள் கைகள் கட்டப்பட்டே கிடந்தன"எனக் கூறியுள்ளார்.
மேலும், ஐ.பி.எல் குறித்தும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். ஐ.பி.எல் குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளுக்காக ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கால்பந்து முடக்கப்படுகிறது. கால்பந்து இந்தியாவில் பெரிய ஒன்றாக மாற வேண்டுமெனில் இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும். கால்பந்து போட்டி அட்டவணைகள், ஐ.பி.எல்-ஐ நம்பி இருக்கக் கூடாது, ஐ.பி.எல்-க்காக அட்ஜஸ்ட் செய்யப்படக்கூடாது.
இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட்காக கால்பந்து அல்லது மற்ற விளையாட்டுகளை நசுக்கக்கூடாது. பிற பிரபலமடைவதைக் கண்டு பயப்பட வேண்டுமா என்ன?. கால்பந்து கதவுகளை இந்திய அரசு திறக்க வேண்டும். இல்லையெனில் எதுவும் நடக்காது"எனவும் கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!