Sports
ஒரே அணியில் இணையும் பாகிஸ்தான், இந்திய வீரர்கள்.. அப்படி என்ன தொடர் அது?: ரசிகர்கள் உற்சாகம்!
உலக அளவில் பரபரப்பான கிரிக்கெட் வரிசையில் எப்போதும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் முன்வரிசையில் இடம்பெறும். இந்த அணிகள் மோதினால் கிட்டத்தட்ட இந்தியாவே ஸ்தம்பித்துபோகும் அளவு எதிர்பார்ப்பு ஏற்படும். ஆனால் அரசியல் காரணங்களால் இந்த அணிகள் ஐ.சி.சி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் எதிர்க்காமல் ஒரே அணியில் இரு நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் இந்த போட்டி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலின் படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணி வீரர்கள் ஆசியா என்ற ஒரே அணியில் இணைந்து விளையாடுவார்கள். அதேபோல ஆப்பிரிக்கா என்ற பெயரில் தென் ஆப்ரிக்கா, கென்யா, ஜிம்பாபே போன்ற அணி வீரர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடுவார்கள்.
இந்த தொடர் ஆசிய ஆப்பிரிக்க கோப்பை என அழைக்கப்படும். இந்த வகை தொடர் இதற்கு முன் இரண்டு முறை நடைபெற்றுள்ளது. முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தொடர் 1-1 என மழையால் டிராவில் முடிந்தது. அதன்பின்னர், 2007ல் நடத்தப்பட்ட இரண்டாவது ஆசிய ஆப்பிரிக்க தொடர் மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி என இரண்டு தொடர்களாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் இந்த தொடர் முழுக்க முழுக்க 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஒரு வேலை இந்த தொடர் நடைபெற்றால் பாபர்,கோலி, ரோஹித் என ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறுவார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!