Sports

‘இது ஆரம்பம்தான்..’ : 89.30.மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை - வெள்ளி வென்ற அசத்திய நீரஜ் சோப்ரா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 87.50 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்தார். அப்போதே, 90 மீட்டர் தூரம் தாண்டி ஈட்டி எறிவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி காண்டினெண்டல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்ததோடு, அவர் தேசிய சாதனையை அவரே தகர்த்துள்ளார். முன்னதாக, 2021 மார்ச்ல் பாட்டியாலாவில் நடைபெற்ற தொடரில் 88.07 மீட்டர் தூரம் எறிந்ததே அவரது தேசிய சாதனையாக இருந்தது.

இந்நிலையில், இந்த தொடரில் 89.30 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். முதலில் 86.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தொடங்கிய நீரஜ் சோப்ராவின் அடுத்த 3 முயற்சிகள் ஃபவுலில் முடிந்தது. 6வது மற்றும் கடைசி த்ரோவில் 85.85 மீட்டர் தூரம் எறிந்தார். ஆகையால், இவர் எறிந்த 89.30 மீட்டர் தூரம் வெள்ளிப் பதக்கத்துக்கு உரியதானதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஃபின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டர் 89.83 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர் 86.60மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனர்.

Also Read: விளையாட்டின் ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் தடகள தங்க மகன்; இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்த நீரஜ்!