Sports
"இந்திய அணியின் Game Changer ஹர்திக் பாண்டியாதான்".. உறுதியாக கூறும் சுனில் கவாஸ்கர்!
2022 டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அந்தத் தொடர் இன்னும் மூன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில், இந்திய அணி இன்னும் சில டி20 தொடர்களில் விளையாடவிருக்கிறது. அதற்குள் இந்திய அணி, அந்த உலகக் கோப்பைக்கான சரியான 15 வீரர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையில் துறுப்புச் சீட்டாக விளங்குவார் என்று கூறியிருக்கிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். டி20 உலகக் கோப்பை மட்டுமல்லாமல், அனைத்து சர்வதேச டி20 போட்டிகளிலுமே இந்திய அணிக்கு அதிமுக்கிய வீரராக ஹர்திக் இருப்பார் என்று சொல்லியிருக்கிறார் ஹர்திக்.
2022 ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் பட்டையைக் கிளப்பிய ஹர்திக் பாண்டியாவை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் கவாஸ்கர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வெல்வதற்கு மிகமுக்கியக் காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.
தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 போட்டிக்குப் பிறகு பேசிய கவாஸ்கர், கவாஸ்கரை புகழ்ந்து தள்ளினார். எதிர்காலத்தில் இந்தியாவின் முக்கிய டி20 பிளேயராக ஹர்திக் விளங்குவார் என்று கூறிய அவர், புதிய பந்திலும் அவர் பந்துவீசத் தொடங்கவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
“இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தான் கேம் சேஞ்சராக இருப்பார் என்று நினைக்கிறேன். வரப்போகும் டி20 உலகக் கோப்பையில் மட்டுமல்ல, அடுத்து வரும் அனைத்துப் போட்டிகளிலுமே அவர் இந்திய அணிக்குத் துறுப்புச் சீட்டாக இருப்பார். ஐந்தாவது வீரராக பேட்டிங் செய்ய வந்தாலும் சரி, முதல் மாற்றாகவோ, இரண்டாவது மாற்றாகவோ பந்துவீச வந்தாலும் சரி, அவரின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதுமட்டுமல்ல, அவர் புதிய பந்தில் பந்துவீசவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர்.
இந்திய அணிக்கு மீண்டும் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தன் கம்பேக் போட்டியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் வீசிய ஒரு ஓவரில் 18 ரன்கள் கொடுத்திருந்தாலும், பேட்டிங்கில் 12 பந்துகள் மட்டுமே சந்தித்து 31 ரன்கள் எடுத்தார் அவர்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித்திடமும் ஹர்திக் பாண்டியா பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஹர்திக்கின் பந்துவீச்சு, ஃபினிஷிங் இரண்டில் எது இந்திய அணிக்கு முக்கியமாக இருக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, “இல்லை. ஏதோ ஒன்று அல்ல. இரண்டுமே அவசியம். ஃபினிஷிங் மட்டுமல்ல, அவரது பந்துவீச்சும் இருக்கும்போது இந்திய அணிக்கு அது பல ஆப்ஷன்களைக் கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார் ஸ்மித்.
“ஆல்ரவுண்டர் ஹர்திக் இருக்கும்போது, உங்களால் ஒரு கூடுதல் ஸ்பின்னரோடு களமிறங்க முடியும். இல்லையேல், ஒரு பௌலர் குறைவாக ஆடி பேட்டிங்கை பலப்படுத்த முடியும். உலகக் கோப்பைக்குச் செல்லம்போது ஒரு முழுமையான ஆல்ரவுண்டரோடு களமிறங்குவது இந்திய அணியின் பேலன்ஸுக்கு மிகவும் முக்கியம்” என்றும் கூறியிருக்கிறார் கிரீம் ஸ்மித்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?