Sports
பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு இந்த அணியின் கையில்தான்.. இன்று MI vs DC போட்டி!
போட்டி 69: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
இடம்: வான்கடே, மும்பை
நேருக்கு நேர்: போட்டிகள்: 31
மும்பை இந்தியன்ஸ் வெற்றி: 16
டெல்லி கேபிடல்ஸ் வெற்றி: 15
முடிவு இல்லை: 0
சிறந்த பேட்டர்:
மும்பை இந்தியன்ஸ்: திலக் வர்மா - 13 போட்டிகளில் 376 ரன்கள்
டெல்லி கேபிடல்ஸ்: டேவிட் வார்னர் - 11 போட்டிகளில் 427 ரன்கள்
சிறந்த பௌலர்:
மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்ப்ரித் பும்ரா - 13 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்
டெல்லி கேபிடல்ஸ்: குல்தீப் யாதவ் - 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள்
2022 ஐபிஎல் தொடரில் இதுவரை:
இந்த சீசன் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை கண்டிராத அளவுக்கு 10 தோல்விகளை அந்த அணி இம்முறை சந்தித்திருக்கிறது. 6 புள்ளிகள் பெற்றிருக்கும் அவ்வணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. வான்கடே மைதானத்தில் இந்த சீசன் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. 6 போட்டிகளில் தோற்றிருக்கிறது. 14 புள்ளிகள் பெற்றிருக்கும் டெல்லி கேபிடல்ஸ், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த சீசன் வான்கடேவில் 4 போட்டிகளில் மோதியிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். அதில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருக்கிறது. மீதி 3 போட்டிகளிலும் தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பின்னுக்குத்தள்ளி டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். ஒருவேளை தோற்றுவிட்டால், அந்த அணியால் அடுத்து சுற்றுக்கு முன்னேற முடியாது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், ஆர்சிபி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
இந்த இரு அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன் பிராபோர்ன் மைதானத்தில் மோதின. அந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத இஷன் கிஷன் 48 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா 41 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார் குல்தீப் யாதவ். கலீல் அஹமது 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை சேஸ் செய்த டெல்லி கேபிடல்ஸ், 10 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. லலித் யாதவ் - அக்ஷர் படேல் கூட்டணி 75 ரன்கள் விளாசி அந்த அணியை வெற்றி பெற வைத்தது. லலித் யாதவ் 48 ரன்களுடனும், அக்ஷர் படேல் 38 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரித்வி ஷாவும் 38 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் பௌலர்களில் பசில் தம்பி 3 விக்கெட்டுகளும், முருகன் அஷ்வின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
கடைசிப் போட்டியில்:
மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் கடைசி போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. சிறப்பாகப் பந்துவீசிய ரமன்தீப் சிங் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரோஹித் ஷர்மா 48 ரன்கள், இஷன் கிஷன் 43 ரன்கள், டிம் டேவிட் 46 ரன்கள் எடுத்தனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணி தங்கள் கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் 63 ரன்கள் விளாசினார். சர்ஃபராஸ் கான் 32 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
மாற்றங்கள்:
தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால் மும்பை அணி பல மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறது. இந்தப் போட்டியிலும் அப்படி சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். டெல்லி கேபிடல்ஸ் அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!