Sports
DC vs KKR : சமபலம் வாய்ந்த அணிகள் மோதல் - தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்குத் திரும்பப்போவது யார்?
போட்டி: டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
இடம்: வான்கடே, மும்பை
நேருக்கு நேர்:
போட்டிகள்: 30
டெல்லி கேபிடல்ஸ் வெற்றி: 14
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி: 16
முடிவு இல்லை: 0
சிறந்த பேட்டர்:
டெல்லி கேபிடல்ஸ்: பிரித்வி ஷா - 7 போட்டிகளில் 254 ரன்கள்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் - 8 போட்டிகளில் 248 ரன்கள்
சிறந்த பௌலர்:
டெல்லி கேபிடல்ஸ்: குல்தீப் யாதவ் - 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகள்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: உமேஷ் யாதவ் - 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்
2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி, 7 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அதில் 3 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. ஒரு போட்டியில் வெற்றி, அடுத்த போட்டியில் தோல்வி என மாறி மாறி சென்றுகொண்டிருக்கிறது அந்த அணியின் சீசன். வான்கடே மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடனான அந்த இரண்டு போட்டிகளிலுமே டெல்லி தோற்றிருக்கிறது. இந்த சீசனை வெற்றியோடு தொடங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு அதன்பிறகு எதுவும் எதிர்பார்த்தது போல் செல்லவில்லை.
இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்திருக்கிறது. 3 வெற்றிகளோடு 6 புள்ளிகள் மட்டும் பெற்று எட்டாவது இடத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. வான்கடேவில் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது கொல்கத்தா. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளை இந்த மைதானத்தில் வீழ்த்தியிருக்கிறது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி. இந்த சீசனில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் பிராபோர்ன் ஸ்டேடியத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ், பிரித்வி ஷா, டேவிட் வார்னர் இருவரும் அரைசதம் அடிக்க, 215 ரன்கள் குவித்தது. சுனில் நரைன் மட்டும் கட்டுக்கோப்பாக பந்துவீசி 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்திருந்தபோதும் கொல்கத்தாவால் 171 ரன்களே அடிக்க முடிந்தது.
கடைசிப் போட்டியில்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான தங்களின் கடைசிப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது டெல்லி கேபிடல்ஸ். ஜாஸ் பட்லர் சதமடித்து மிரட்டியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 222 ரன்கள் குவித்தது. கடைசி ஓவர் வரை போராடிய டெல்லியால் 205 ரன்களே அடிக்க முடிந்தது.
தங்கள் கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக தோல்வியடைந்திருந்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஆரம்பத்தில் குஜராத் சிறப்பாக விளையாடியிருந்தாலும் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி அந்த அணியை 156 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது கொல்கத்தா. கடைசி ஓவரில் மட்டும் ஆண்ட்ரே ரஸல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், கொல்கத்தாவால் அந்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியவில்லை. ரஸல் போராடியபோதும் அந்த அணியால் 148 ரன்களே அடிக்க முடிந்தது.
மாற்றங்கள்: கொல்கத்தா அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதில் கே.எஸ்.பரத் களமிறக்கப்படலாம்.
பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?:
டெல்லி கேபிடல்ஸ்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், கே.எஸ்.பரத், ரிசப் பன்ட் (C) (WK), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அஹமது, குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நித்திஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, டிம் சௌத்தி, வருண் சக்ரவர்த்தி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!